Home வணிகம்/தொழில் நுட்பம் உலகின் மிகப் பெரிய விமானம் அறிமுகப்படுத்தப்பட்டது

உலகின் மிகப் பெரிய விமானம் அறிமுகப்படுத்தப்பட்டது

990
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சிபூர்வமாக உருவாக்கப்பட்டு வந்த உலகின் மிகப் பெரிய விமானம் இன்று சனிக்கிழமை தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடக்குப் புறத்தில் உள்ள பாலைவனப் பகுதியில் நீண்ட காலமாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானம் ஆறு இயந்திரங்களைக் கொண்டது. அதன் இறக்கைகளின் விரிப்பு ஒரு காற்பந்து மைதானம் அளவுக்கு பரந்த அமைப்பைக் கொண்டதாகும்.

ஸ்ட்ராடோலாஞ்ச் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இந்த விமானத்தை உருவாக்கியிருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான அமரர் பால் அலென் இந்த நிறுவனத்தை கடந்த 2011-ஆம் ஆண்டில் தோற்றுவித்தார்.