Home இந்தியா வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியா?

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியா?

742
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியப் பொதுத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா முழுமையும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் முக்கியத் தொகுதியாக உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மாறியுள்ளது.

இங்கு போட்டியிடப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும் என்ற ஆரூடங்கள் இந்திய ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

மோடியை எதிர்த்து பிரியங்கா நேரடியாகப் போட்டியிட்டு அவரைத் தோற்கடிக்கும் வியூகத்தை காங்கிரஸ் வகுத்துள்ளது. இந்த வியூகத்தில் பிரியங்காவுக்கு பெரும் சவாலாக இருக்கப் போவது அவரது கணவரான ராபர்ட் வதேரா மீது நிலவி ஊழல் குற்றச்சாட்டுகள்தான் என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

அவ்வாறு மோடியை எதிர்த்து பிரியங்கா களமிறங்கினால், அகில உலகமும் உற்று நோக்கும் முதன்மை நாடாளுமன்றத் தொகுதியாக வாரணாசி உருவெடுக்கும்.