புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களைவத் தேர்தல் நடந்துக் கொண்டிருக்கையில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வணிகர்களுக்கு 5 மில்லியன் ரூபாய் வரையிலும் பிணையில்லாமல் கடன் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பணவீக்கத்திற்கு வணிகர்களே காரணம் என குற்றம் சாட்டிய காங்கிரஸ், வர்த்தகத்தை பாதிக்கும் பல சட்டங்களை உருவாக்கியது அவர்கள்தான் என மோடி குற்றம் சாட்டினார். கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின் போது இதே போன்று வணிகர்கள் கூட்டத்தில் பேசியதை நினைவுக் கூர்ந்த மோடி, அப்போது வணிகத்தை பாதிக்கும் சட்டங்கள் நீக்கப்படுமென வாக்குறுதி அளித்ததை சுட்டிக் காட்டினார்.
இதுவரையயிலும், தாம் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளதாக மோடி கூறினார். மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக உலக அளவில் வர்த்தகத்திற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி உள்ளதை அவர் குறிப்பிட்டார்.
ஒரு காலத்தில் தங்கம் விளையும் பூமியாக இந்தியா அழைக்கப்பட்டதாக கூறிய மோடி, அந்த நிலைக்கு நாட்டை மீண்டும் உயர்த்துவதே தமது இலட்சியம் எனத் தெரிவித்தார்.