Home நாடு கடுமையான சட்டங்கள் குறித்து மாற்றி பேசும் நம்பிக்கைக் கூட்டணியின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது!- சுஹாகாம்

கடுமையான சட்டங்கள் குறித்து மாற்றி பேசும் நம்பிக்கைக் கூட்டணியின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது!- சுஹாகாம்

845
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 14-வது பொதுத் தேர்தலுக்கு பின் கடுமையான சட்டங்கள் சிலவற்றை மாற்றியமைக்க நம்பிக்கைக் கூட்டணி சிறப்புக் குழு ஒன்றினை அமைத்து அவற்றை குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறியது.

ஆயினும், இதுநாள் வரையிலும் அச்சட்டங்கள் அனைத்தும் மாற்றியமைக்கப்படாமல் அதிலிருந்து பின்வாங்கும் நடப்பு அரசின் செயல் அதிர்ச்சியை அளிக்கிறது என மனித உரிமை ஆணைய ஆணையாளர் ஐய்ஷா பிடின் கூறினார்.   

என்ன நடந்ததென்றால், கடந்த ஆண்டில் சிறப்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அவை கடுமையான பாதுகாப்புச் சட்டங்களான, பாதுகாப்புக்கு தவறிழைத்தல் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா), குற்றத் தடுப்புச் சட்டம் (பொகா) மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் (பொதா) 2015, ஆகிய சட்டங்களை மாற்றியமைக்க சிறப்புக் குழு ஆய்வு செய்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்தக் சிறப்புக் குழுவின் செயல்பாடு, இச்சட்டங்களை மாற்றியமைக்கும் எண்ணத்தில் நடத்தப்படவில்லை என்பது மட்டும் உண்மை” என அவர் சாடினார்.

#TamilSchoolmychoice

14-வது பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு, உள்துறை அமைச்சரான மொகிதின் யாசின் இந்தச் சட்டங்களை மாற்றியமைப்பதற்காக சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, இந்த சட்டங்களை பரிசீலிக்கும் எனக் கூறினார். நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் இதுவும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், சொஸ்மா மற்றும் பொகா ஆகிய சட்டங்களை தக்க வைப்பதோடு இல்லாமல், ஒரு சில திருத்தங்கள் மட்டுமே செயல்படுத்தப்படும் எனக் கூறியிருந்ததை ஐய்ஷா சுட்டிக் காட்டினார். இன்னும், இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மொகிதின் கூறுவதை ஐய்ஷா குறிப்பிட்டுக் கூறினார்.