Home நாடு 1எம்டிபி: நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல் தாக்குதல்கள் வெளிப்படுகின்றன!

1எம்டிபி: நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல் தாக்குதல்கள் வெளிப்படுகின்றன!

818
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் 1எம்டிபி திட்டமானது முக்கியப் பங்கினை வகித்துள்ளதை நம்பிக்கைக் கூட்டணி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மசீச கட்சித் தலைவர் வீ கா சியோங் கூறினார்.

இதுகாறும், 1எம்டிபி திட்டம் குறித்து அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் போக்கினை மக்கள் கண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

140 பில்லியன் பெறுமானமுள்ள பண்டார் மலேசியா எனும் திட்டமானது நாட்டின் நிதி நிலையை உயர்த்த உதவும் என பிரதமரே ஒப்புக் கொண்டதை வீ குறிப்பிட்டார். மேலும், டிஆர்எக்ஸ் திட்டமானது, நாட்டின் மிகச் சிறந்த திட்டங்களில் ஒன்று என நிதி அமைச்சர் லிம் குவான் எங் குறிப்பிட்டதையும் வீ சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

இவ்விரண்டு இத்திட்டங்களையும் இணைந்தால் 180 பில்லியனைக் கொண்டிருக்கின்றன. நாட்டின் 30 பில்லியன் கடனை அளிப்பதற்கு இது போதுமானது” என அவர் கூறினார்.

இனி, 1எம்டிபி திட்டத்தினை குறி வைத்து நம்பிக்கைக் கூட்டணி அரசியல் நடத்த இயலாது எனவும், இதுகாறும் அவர்கள் கூறி வந்த பொய்கள் அனைத்தும் அதுவாகவே வெளிவரும் நேரம் எனவும் வீ நினைவூட்டினார்.