புது டில்லி: தயாநிதி அழகிரியின் சுமார் 400 மில்லியன் ரூபாய் மதிப்பிலான 25 அசையும் அசையா சொத்துகளை இந்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளருமான தயாநிதியின், சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள நிலம், கட்டிடங்கள் போன்ற சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் கருங்கல் சுரங்கம் நடத்தியது தொடர்பான வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோதமாக சுரங்கத்தை நடத்திய புகாரின் பேரில் பங்குதாரர்களான எஸ். நாகராஜன், தயாநிதி அழகிரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் அளித்துள்ளது. இதனை அடுத்து, பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.