Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியா: டிக் டாக் செயலி மீதான தடை நிபந்தனையுடன் நீக்கம்!

இந்தியா: டிக் டாக் செயலி மீதான தடை நிபந்தனையுடன் நீக்கம்!

925
0
SHARE
Ad

சென்னைடிக் டாக் செயலியினால் ஏற்பட்ட சமூக பிரச்சனைகள் காரணமாக அதன் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், ஏராளமான பயனர்கள் பாதிக்கப்பட்டதுடன் தங்களின் வருத்தத்தை சமூகத் தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதனிடையே, டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீக்கியுள்ளது. இதனால் டிக் டாக் செயலி விரைவில் பிளே ஸ்டோருக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

அனைத்துலக அளவில் பிரபலமாக உள்ள டிக் டாக் செயலி ஆபாசத்தை பரப்புவதாக கூறி அதற்கு தடை விதிக்க வலியுறுத்தி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செயலிக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது

#TamilSchoolmychoice

மேலும், மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து டிக் டாக் செயலி ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆபாசத்தை பரப்பும் காணொளிகள், சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தும் காணொளிகள் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.