வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக் காலத்தில் சீனாவின் குறுஞ்செயலிகளான டிக் டாக், வீ சாட் போன்றவற்றின் செயல்பாட்டுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக தடைவிதித்தார்.
எனினும் இதன் தொடர்பி்ல் டிரம்பின் முடிவுக்கு எதிராக தடையுத்தரவு கோரிய வழக்குகளும் தொடுக்கப்பட்டன.
தற்போது ஜோ பைடன் சீனாவின் குறுஞ்செயலிகள் மீதான தடைகளை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இருந்தாலும் இந்த செயலிகளினால் அமெரிக்க பாதுகாப்புக்கு அபாயம் இருக்கிறதா என்பதை ஆராய்வதற்கும் பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து இந்த குறுஞ்செயலிகளினால் அமெரிக்க பாதுகாப்புக்கு இடையூறு என்றால் அத்தகைய செயலிகள் தடை செய்யப்படலாம்.