Home நாடு விக்னேஸ்வரனும் மாமன்னரைச் சந்திக்கிறார்

விக்னேஸ்வரனும் மாமன்னரைச் சந்திக்கிறார்

1192
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் அரசியல் கட்சித் தலைவர்களின் வரிசையில் மாமன்னரைச் சந்திக்கவிருக்கிறார். அவரை இன்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் மாமன்னர் சந்திக்க அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாக பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்தது.

தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியான மசீசவின் தலைவர் வீ கா சியோங்கை மாமன்னர் நேற்று வியாழக்கிழமை சந்தித்தார். அதைத் தொடர்ந்து இன்று விக்னேஸ்வரனைச் சந்தித்தார்.

கடந்த புதன்கிழமை (ஜூன் 9) தொடங்கி வரிசையாக பல அரசியல் தலைவர்களை மாமன்னர் சந்தித்தார். நேற்று வியாழக்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 2.00 மணியளவில் மாமன்னரைச் சந்தித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் அதன் பின்னர் இயங்கலை வழியான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தினார்.

#TamilSchoolmychoice

முதல் தலைவராக புதன்கிழமை காலையில் பிரதமர் மொகிதின் யாசினைச் சந்தித்த மாமன்னர், அதன் பிறகு அன்வார் இப்ராகிம், ஜசெகவின் லிம் குவான் எங், அமானா கட்சியின் முகமட் சாபு ஆகியோரையும் சந்தித்தார்.

நேற்று வியாழக்கிழமை பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம், மசீச தலைவர் வீ கா சியோங் ஆகியோரையும் சந்தித்தார் மாமன்னர். பிற்பகலில் மகாதீரைச் சந்தித்த பின்னர் சபா வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டாலைச் சந்தித்தார்.

அம்னோ தலைவர்கள் மாமன்னர் சந்திப்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.