Home நாடு சாஹிட் ஹமிடி மாமன்னரைச் சந்தித்தார்

சாஹிட் ஹமிடி மாமன்னரைச் சந்தித்தார்

901
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இஸ்தானா நெகாராவில் அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் மூன்றாவது நாளாக இன்று சந்திக்க உள்ளார்.

தற்போது, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியை இஸ்தானா நெகாராவில் சந்திக்கிறார்.
ஒரு வெள்ளி வெல்பைரில் சாஹிட் ஹமிடி அரண்மனையை வந்தடைந்தார்.

கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் எட்டு கட்சி தலைவர்கள் சுல்தான் அப்துல்லாவை சந்தித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் பிரதமர் முஹைதின் யாசின், முதல் நாளில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், ஜசெகவின் லிம் குவான் எங் மற்றும் அமானா தலைவர் முகமட் சாபு ஆகியோரும் அடங்குவர்.

நேற்று, பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், மசீச தலைவர் வீ கா சியோங், பெஜுவாங் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் ஆகியோர் மாமன்னரைச் சந்தித்தனர்.