Home நாடு சண்டாக்கான்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகள் போட்டி!

சண்டாக்கான்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகள் போட்டி!

857
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

சண்டாக்கான்: வருகிற மே 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து முன்னாள் நாடாளுமன்ற உருப்பினரான, ஸ்டீபன் வோங்கின் மகள் விவியன் போட்டியிட உள்ளார். இந்த அறிவிப்பினை இன்று வியாழக்கிழமை சபா மாநில முதல்வர் முகமட் ஷாபி அப்டால் அறிவித்தார்.

ஜசெக கட்சியின் மூத்த தலைவரான லிம் கிட் சியாங் மற்றும் ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆஸ்திரேலியாவின் முர்டோச் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டம் பெற்ற 30 வயதான விவியன், இம்முறை இந்த இடைத் தேர்தலில் களம் இறங்க உள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, தேசிய முன்னணி இத்தொகுதியில் போட்டியிடவில்லை என்பதை அக்கூட்டணியின் துணைத் தலைவர் முகமட் ஹசான் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.