Home நாடு எஸ்ஆர்சி: பணம் தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து நஜிப் புகார் ஏதும் அளிக்கவில்லை!

எஸ்ஆர்சி: பணம் தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து நஜிப் புகார் ஏதும் அளிக்கவில்லை!

1008
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான ஒன்பதாவது நாள் விசாரணை இன்று வியாழக்கிழமை தொடங்கியது.

முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார விதிமீறல் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார்கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கு சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில், எந்தவொரு பிழைகள், முறைகேடுகள், முரண்பாடுகள், அங்கீகரிக்கப்படாத செலவுகள் மற்றும் மோசடி போன்ற காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அம்பேங்கை தொடர்புக் கொள்ளவில்லை என ஜாலான் ராஜா சூலான் அம்பேங் கிளை வங்கி தலைமை நிருவாகி ஆர். உமா தேவி கூறினார்.

#TamilSchoolmychoice

மேற்குறிப்பிட்ட எந்தவொரு நடவடிக்கைகள் குறித்தும் நஜிப் நடவடிக்கை எடுக்கவில்லை என உமா தேவி கூறினார்.

முன்னதாக, நஜிப் நிக் பைசாலுக்கு வழங்கிய நான்கு ஆணை கடிதங்கள் சாட்சியின் பார்வைக்கு வைக்கப்பட்டது. “வங்கிப் பரிமாற்றங்களை நடத்த, காசோலைகள், வங்கி அறிக்கைகள் ஆகியவற்றிற்காக நிக் பைசாலுக்கு வழங்கப்பட்ட அனுபதி ஆணைகள் இவை” என உமா கூறினார்.

இதற்கிடையில், நஜிப்பின் வழக்கறிஞர் ஹெர்விண்டர்ஜித் சிங் குறுக்கு விசாரணை நடத்திய போது, தேசிய வங்கியிலிருந்தும், ஊழல் தடுப்பு ஆணையத்திலிருந்தும் சில அதிகாரிகள், குறிப்பிட்ட ஆவணங்களைப் பெறுவதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 66-ஆம் தேதி அம்பேங்கிற்கு வந்திருந்ததாக உமா தேவி குறிப்பிட்டார்.

நான் அவர்களை ஒன்பதாவது மாடியில் உள்ள சந்திப்பு அறைக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு தேவையான ஆவணங்களைப் பெறுவதற்கு உதவி செய்தேன்” என உமா தேவி கூறினார்.