கோலாலம்பூர்: ஜோகூர் மாநில ஆட்சிக்குழுவில் ஏற்பட்ட மாற்றத்தினால் பிரதமர் மகாதீர் முகமட் கோபமடைந்து பதவியை விட்டு விலகப்போவதாக கூறியது குறித்து நம்பதக்க வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் விவகாரத்தில், தற்போதைய மந்திரி பெசார் தனது அறிவுரையைக் கேட்காதது பிரதமருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து இதர ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்களின் அதிருப்தியை வெளிபடுத்தி உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி, மாநில ஆட்சிக்குழுவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு புதிய ஜோகூர் மந்திரி பெசாரிடம், ஜோகூர் சுல்தான் கூறியதாக குறிப்பிடப்பட்டது.
பல பிரச்சினைகள் குறித்து ஜோகூர் அரண்மனையுடன் அடிக்கடி ஒத்துப் போகாத பிரதமர் மகாதீரின் நிலைப்பாட்டினால், நிலைமை மேலும் மோசமடையும் என்பதால், நேரடியாக வந்து தம்மை சந்தித்துப் பேசுமாறு சுல்தான் இப்ராகிம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.