இயக்குநர் செல்வராகவன் உடன் முதல் முறையாக நடிகர் சூர்யா இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி, ஜகபதி பாபு, மன்சூர் அலிகான், பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் வருகிற மே 31-ஆம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழ்காணும் இணைப்பில் காணலாம்:
Comments