Home நாடு நம்பிக்கைக் கூட்டணி கீழ் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்!- பிரதமர்

நம்பிக்கைக் கூட்டணி கீழ் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்!- பிரதமர்

761
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின் கீழ் இஸ்லாமிய மதம் பாதுகாப்பற்ற நிலையைச் சந்தித்து வருவதாகக் கூறிய பெர்லிஸ் மாநில முப்தி டாக்டர் முகமட் அஸ்ரி சைனுல் அபிடினுக்கு தமது கண்டனத்தை பிரதமர் வெளியிட்டுள்ளார்.

“இஸ்லாமிய மக்களின் குரலைக் கேட்க முடியாத அவர் (அஸ்ரி சைனுல்), காது கேளாதவர் போலும். எங்களின் ஆட்சியில் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறாகள்” என பிரதமர் அஸ்ரியை சாடியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அஸ்ரி,உண்மையில் யாருக்கு காது சரியாக கேட்கவில்லை என்பது தெரியவில்லை” என நகைத்து தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய மக்கள் உண்மையாகவே நம்பிக்கைக் கூட்டனியின் ஆட்சியில் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள் என அஸ்ரி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

சமீபக்காலமாக பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் மத அடிப்படையிலான விவகாரங்கள் அல்லது கருத்துகள் வெளிப்படையாகவும் இழிவுப்படுத்தும் படியாகவும் வெளியிடப்பட்டு வருகின்றன.

பொதுவாக மக்கள் இந்த சூழ்நிலைக்கு காரணமாக அமைவது ஒரு சில அரசியல் கட்சிகளின் சுயநலப் போக்குதான் எனக் குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலைத் தொடர்ந்தால் இவ்வளவு காலமாக பேணிக் காத்த அமைதியும் ஒற்றுமையும் நாசமாகி விடும் என ஒரு சிலர் கருத்துரைத்தும் வருகின்றனர்.