“நாம் கடந்த காலத்தில் பல்வேறு சவால்கள் மற்றும் தடைகளை கடக்க நேரிட்டது. அவற்றை நல்லமுறையில் நிர்வகித்து நாட்டை காப்பாற்றினோம். தற்போதும், எதிர்காலத்தில் இவ்வாறான சூழல்கள் ஏற்படும் போதும் நாம் அவற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது” என பிதரமர் கூறினார்.
கடந்த காலங்களில் தாம் நாட்டை வழிநடத்திய அனுபவத்தை பற்றி கருத்துரைக்கையில், பொதுவான நோக்கங்கள் மற்றும் இலக்குகளை கொண்டிருந்தால் மட்டுமே பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒற்றுமையை அடைய முடியும் எனக் குறிப்பிட்டார்.
சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு நாடு பல்வேறு சவால்களை கடந்து வந்து விட்டது. அதனை தாம் நேரில் பார்த்தாகவும், உண்மையான போராட்டம் காரணமாக ஒரு சிறந்த அடித்தளத்தை உருவாக்கி நம்பிக்கை மிக்க மற்றும் உறுதியுள்ள நாட்டினை உருவாக்க முடிந்தது என அவர் குறிப்பிட்டார்.