Home நாடு தோட்டப் பாட்டாளிகளை குறி வைத்து ஷாபி கருத்து தெரிவித்தது ஏன்? மன்னிப்பு கேட்க வேண்டும்!

தோட்டப் பாட்டாளிகளை குறி வைத்து ஷாபி கருத்து தெரிவித்தது ஏன்? மன்னிப்பு கேட்க வேண்டும்!

868
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தின் உள்ளே விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புகைப்படம் எடுக்க முற்பட்டதாகக் கூறி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதன் காரணமாக, அவரது வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா ஊடகவியலாளர்கள் தோட்ட பாட்டாளிகள் (எஸ்டேட் பீபல்) போல நடந்து கொள்ளக்கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்து மக்களிடத்திலும் தலைவர்களிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கருத்துரைத்த சோசியலிஸ் கட்சித் தலைவர் எஸ். அருட்செல்வன்,  பத்திரிக்கையாளர்களிடமிருந்து ஷாபி தொழில்சார்வாதத்தை எதிர்பார்த்திருந்தால், அதையேஅவர்எடுத்துக்காட்டாக செய்திருக்க வேண்டும்என்று கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

மேலும்,தோட்டப் பாட்டாளிகளைமுன்வைத்து ஷாபி கருத்துரைத்தது குறித்து அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களை குறி வைத்து ஷாபி தமது கருத்தினை முன்வைத்தது எந்த நோக்கத்திற்காக என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டார். உழைப்பை மட்டும் தங்களின் வாழ்வாதாரத்திற்கு மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்களை இழிவாக பேசும் நடவடிக்கையாக இதனைக் கருத வேண்டியுள்ளது என அமைச்சர் கூறினார்.