Home 13வது பொதுத் தேர்தல் வங்சா மாஜூ தொகுதியில் மும்முனைப் போட்டி!

வங்சா மாஜூ தொகுதியில் மும்முனைப் போட்டி!

851
0
SHARE
Ad

Tan-Kee-Kwong-Wangsa-Maju-Sliderகோலாலம்பூர், ஏப்ரல் 11 –   கூட்டரசுப் பிரதேச மாநிலத்திலுள்ள வங்சா மாஜூ நாடாளுமன்ற தொகுதியில் அம்னோ-தேசிய முன்னணி சார்பாக டாக்டர் ஷாபி அப்துல்லா,  நடப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் வீ  சூ கியோங் மற்றும் பிகேஆர்-மக்கள் கூட்டணி வேட்பாளர் டத்தோ டாக்டர் டான் கீ குவாங்  ஆகிய மூவருமே போட்டியிடவிருப்பதால் இங்கு மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

2008ல் மசீசவைச் சேர்ந்த டத்தோ இயூ தியோங் லூக் தேசிய முன்னணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நிலையில், இம்முறை அம்னோ தமது வேட்பாளரான ஷாபியை தேசியமுன்னணியின் கீழ் நிறுத்த உள்ளது.

வங்சாமாஜூ தேசியமுன்னணியின் தலைவர் டத்தோ டாக்டர் ஷாபி அப்துல்லா இத்தொகுதிக்கு புதியவர் அல்ல என்பதோடு, இந்த தொகுதியின் அம்னோ தலைவராகவும் இருக்கின்றார் என்பதால் அவரே இங்கு நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

பிரதமரின் அரசியல் செயலாளரான ஷாபி, தான் இங்கு 1988 முதல் வசித்து வருவதாகவும், மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டே தாம் அம்னோவில் தம்மை இணைத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

பிகேஆர் வேட்பாளராக இத்தொகுதியில் வென்று, பின்பு சுயேட்சை வேட்பாளராக தன்னை அறிவித்துக் கொண்ட வீ  சூ கியோங் தனது கடந்த கால சேவை தம்மை வெற்றி பெறச்செய்யும் என்று அறிவித்திருந்தாலும், அரசியல் நோக்கர்கள் அவர் வெற்றி பெறுவது கடினம் என்றே கருதுகின்றனர்.

இம்முறை மக்கள் கூட்டணி சார்பாக டத்தோ டாக்டர் டான் நிறுத்தப்படுகிறார். இவர் முன்னாள் துணை அமைச்சரும், முன்னாள் கெராக்கான் தலைவர்களில் ஒருவரும், முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

மேலும் இவர் முன்னாள் எதிர்கட்சித்தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் டான்  சீ கூனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.