Home 13வது பொதுத் தேர்தல் வங்சா மாஜூ தொகுதி: அம்னோ – மசீச இழுபறி நிலை!

வங்சா மாஜூ தொகுதி: அம்னோ – மசீச இழுபறி நிலை!

644
0
SHARE
Ad

BN Logoகோலாலம்பூர், ஏப்ரல் 12- கோலாலம்பூரின் வங்சா மாஜூ தொகுதியில் தேசிய முன்னணி-அம்னோ வேட்பாளராக, பிரதமரின் அரசியல் செயலாளரும், வங்சா மாஜூ அம்னோ தொகுதி தலைவருமான ஷாபி அப்துல்லா நிறுத்தப்படுவார் என்ற அறிவிப்பால் மசீசவின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை வங்சா மாஜூவின் பெரும்பாலான மசீசவினர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்

அண்மையில் இந்த தொகுதியில் மசீச சார்பில் நடைபெற்ற விருந்து நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சுமார் 80 அமைப்புகளைச் சார்ந்த 3000க்கும் மேற்பட்ட மசீசவின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், தங்களை ஆலோசிக்காமல் அத்தொகுதியை அம்னோவுக்கு விட்டுக்கொடுத்த கட்சித்தலைவர் டத்தோஸ்ரீ சுவா சொய் லெக்கை வண்மையாகக் கண்டித்தனர்.

ஒரு முறை அம்னோவுக்கு அத்தொகுதி கொடுக்கப்பட்டு விட்டால் மீண்டும் திரும்பப் பெறமுடியாது என்றும் அங்கு தேமு வேட்பாளராக வங்சா மாஜூ மசீச தலைவரும் கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டவருமான டத்தோ இயூ தியோங் லூக் திரும்பவும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இல்லையேல் அவர் அங்கு சுயேட்சையாக  போட்டியிட வேண்டும் என வங்சா மாஜூ மசீசவினர் வலியுறுத்தி உள்ளனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே அவசரக்கூட்டம் நடத்திய வங்சாமாஜூ மசீச தொகுதி, இயூ வேட்பாளராக நிறுத்தப்படாவிட்டால் தேர்தல் பரப்புரையை புறக்கணிப்பதெனவும், தேசிய முன்னணி நடவடிக்கைகளில் கலந்து கொள்வதில்லை எனவும் முடிவு செய்துள்ளது.

“அம்னோ எடுத்துக் கொள்ளவில்லை, திரும்பப் பெற்றுள்ளது”

இதுபற்றிக் கருத்துரைத்த அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் மசீச இத்தொகுதியை இம்முறை திருப்பித் தந்திருக்கிறதே தவிர அது அவர்களுடைய தொகுதியல்ல என்றும், வங்சாமாஜூ அவர்களுக்கு இரவலாகத் தரப்பட்டத் தொகுதியே என்றும், தமக்குத் தெரிந்தவரையில் அது இந்தியர்களுக்கானத் தொகுதியென்றும் கூறினார்.

மேலும் அது எப்படி மசீசவுக்கு வழங்கப்பட்டது என்று தெரியவில்லை என்றும், இப்போது தொகுதி நிலவரத்தை ஆராய்ந்த பின் அவர்களே திருப்பித்தருகின்றனர் என்றும் தெங்கு கூறினார்.

இதற்கிடையில் தேர்தல் பரப்புரையை புறக்கணிப்பதென முடிவுசெய்துள்ள வங்சா மாஜூ மசீசவினரின் கருத்து தேசியமுன்னணியை அவமதிக்கும் செயல் என இங்கு தேசிய முன்னணி சார்பாக நிறுத்தப்படவுள்ள ஷாபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கடந்த முறை 150 வாக்குகள் வித்தியாசத்திலேயே மக்கள் கூட்டணி வேட்பாளர் வீ  சூ கியோங் வென்ற தொகுதி வங்சா மாஜூ என்பதால், இந்த முறை எப்படியும் இதனைக் கைப்பற்றி விடலாம் என தேசிய முன்னணி கருதிக் கொண்டிருந்த வேளையில் அம்னோ-மசீச கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையினால் மீண்டும் இந்த தொகுதியை தேசிய முன்னணி பறிகொடுக்கலாம்.

67,858 வாக்குகளைக் கொண்ட இந்த தொகுதியில் 53 சதவீதம் மலாய்க்கார வேட்பாளர்களும், சீனர்கள் 36 சதவீதமும், இந்தியர்கள் 8 சதவீதமும் இந்த தொகுதியில் இருக்கின்றனர்.

வங்சா மாஜூ நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் நிலவரம்,

வங்சா மாஜூ நாடாளுமன்றம்