Home நாடு சண்டாக்கான்: “நஜிப், இங்கு வந்தும் ஊழலைப் பற்றியப் பாடம் எடுக்க போகிறாரா?”- குவான் எங்

சண்டாக்கான்: “நஜிப், இங்கு வந்தும் ஊழலைப் பற்றியப் பாடம் எடுக்க போகிறாரா?”- குவான் எங்

680
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாளை சனிக்கிழமை சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சண்டாக்கான் தொகுதிக்கு வருகை புரிய இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜசெக கட்சியின் தலைமை செயலாளர் லிம் குவான் எங் கூறுகையில், தற்போது நஜிப் ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் போன்ற குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறார். அப்படி பார்க்கும் போது, அவர் சண்டாக்கானுக்கு வந்து ஊழலைப் பற்றிய பாடம் எடுப்பார் போலும் என நகைத்துப் பேசினார்.    

நீதிமன்றத்தில் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், தம்மை தாமே மெச்சிக் கொள்ளும் வகையில் மாலு அப போஸ்கு” எனும் அடைமொழியை வைத்துக் கொண்டு நாடு முழுவதிலும் சென்று வருவது பெருமைக்குரியது அல்ல என லிம் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

முன்னதாக இது குறித்து பிரதமர் மகாதீரும் குறிப்பிட்டிருந்ததை லிம் தெரிவித்தார்.