Home உலகம் பவளப்பாறைகளின் அழிவால் தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது!

பவளப்பாறைகளின் அழிவால் தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது!

795
0
SHARE
Ad

பங்கோக்: 2000-ஆம் ஆண்டு வெளிவந்ததி பீச்எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் உலக பிரபலமான தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021-ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திலுள்ளபி பி லேஎனும் தீவிலுள்ளமாயா பேகடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டக் காரணத்தினால் அதன் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக அக்கடற்கரை கடந்தாண்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

மூடப்படுவதற்கு முன்புவரை இக்கடற்கரையில் நாள் ஒன்றுக்கு 5,000 சுற்றுலாப் பயணிகள் வரையிலும் கூடுவார்கள் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக அந்த கடற்கரை பகுதியில் காணப்பட்ட அரிய வகை பவளப்பாறைகள் அழிவுக்குள்ளாகி வருவதாக கண்டறியப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்த கடற்கரை பகுதியின் வாழ்க்கைச்சூழல் மென்மேலும் மேம்பாடடையும் பொருட்டு இந்த தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.