Home கலை உலகம் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது!

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது!

921
0
SHARE
Ad

சென்னை: தனுஷ் நடிப்பில்எனை நோக்கி பாயும் தோட்டாதிரைப்படம் ஏப்ரலில் வெளிவரும், மே மாதத்தில் வெளிவரும் எனக் கூறிய படக்குழுவினருக்கு நீதிமன்றம் வருத்தம் அளிக்கும் உத்தரவினை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தினை கேப்டன் நிறுவனத்தின் சார்பில் ராஜராஜன் என்பவர் வெளியிட இருந்தார். இவர் ஏற்கனவேபாகுபலிஇரண்டாம் பாகத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டவர். அப்போது, பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு 17 கோடி ரூபாய் பணத்தை கேப்டன் நிறுவனம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால், ‘என்னை நோக்கி பாயும் தோட்டாவுக்கு தடைவிதிக்கக் கோரி பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில், தற்போது இப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த அறிவிப்பிற்குப் பிறகு வெகுநாட்களாக இப்படத்திற்காக காத்திருந்த இரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  இதனிடையே, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருந்த சிந்துபாத்’ என்ற படத்தையும் இவரே வெளியிட இருந்ததால், அப்படத்திற்கும் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.