Home நாடு ஜோ லோ, ரேப் பாடகர் மிஷல் மீது அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு!

ஜோ லோ, ரேப் பாடகர் மிஷல் மீது அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு!

751
0
SHARE
Ad

வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மற்றும் அமெரிக்க ரேப் பாடகர் பிராஸ் மிஷல் மீது அமெரிக்க சட்டத்துறை குற்றம் சாட்டி உள்ளதாக ராயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சட்டவிரோதமான நிதியை தேர்தல் பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்டதன் காரணமாக இவ்விருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்குப்படி, கடந்த 2012-ஆம் ஆண்டில் ஜூன் மற்றும் நவம்பர் மாதம், ஜோ லோ சுமார் 21.6 மில்லியன் அமெர்க்க டாலரை வெளிநாட்டு வங்கிக் கணக்கிலிருந்து மிஷலுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

எனினும், அந்நிதியானது எந்த ஜனாதிபதி வேட்பாளருக்காக பயன்படுத்தப்பட்டது எனும் தகவலை வெளியிடவில்லை. ஆனால், மிஷல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தேர்தல் சட்டத்தின் அடிப்படையில், தேர்தல் நோக்கத்திற்காக வெளிநாடுகளிலிருந்து நிதி பெறப்பட்டால் அது குற்றவியல் செயலாகக் கருதப்படுகிறது.