Home இந்தியா கமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி, தமிழகத்தில் நடந்த சம்பவத்திற்கு டெல்லியில் வழக்கு!

கமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி, தமிழகத்தில் நடந்த சம்பவத்திற்கு டெல்லியில் வழக்கு!

682
0
SHARE
Ad

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்சைக்குரிய வகையில் கமல்ஹாசன் பேசியதற்கு எதிராக பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 12-ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியே ஓர் இந்துதான் எனக் குறிப்பிட்டது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் பாஜகவின் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா, கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரைக்கு தடைக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

#TamilSchoolmychoice

அதன் மீதான விசாரணை இன்று புதன்கிழமை நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற விவகாரத்திற்கு எதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வியை எழுப்பினர்பலமுறை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் பதில் இல்லாதக் காரணத்தால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியதாக அவர் தெரிவித்தார்

இதுதொடர்பாக பதில் கூறிய தேர்தல் ஆணையம், கமல்ஹாசன் மீதான புகார் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். அவர் மீதான புகாரை ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டது.