Home நாடு நஜிப்பின் வங்கிக் கணக்குகள் என தெரியாமலேயே பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன!

நஜிப்பின் வங்கிக் கணக்குகள் என தெரியாமலேயே பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன!

600
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதினெட்டாவது நாள் விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது.

முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார விதிமீறல் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார்கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

நஜிப் ரசாக்கின் வங்கி கணக்குகள் என தெரியாமலேயே ஏஷான் பெர்டானா செண்டெரியான் பெர்ஹாட், மில்லியன் கணக்கான பணத்தை இரண்டு வங்கிக் கணக்குகளில் செலுத்தி உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிருவாக இயக்குனர் டாக்டர் ஷாம்சுல் அன்வார் சுலைமான் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த 2014-ஆம் ஆண்டு மற்றும் 2015-ஆம் நடந்த மூன்று வெவ்வேறு பரிவர்த்தனைகளை தாம் முடித்து தந்ததாக அவர் குறிப்பிட்டார். 27 மில்லியன், 5 மில்லியன் மற்றும் 10 மில்லியன் என மூன்று பரிவர்த்தனைகள் 906 மற்றும் 880 என முடியும் வங்கிக் கணக்கிற்குள் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

முன்னாள் அம்னோ கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவருமான ஷாம்சுல், யாயாசான் ராக்யாட் 1 மலேசியா அமைப்பின் தலைமை நிருவாக அதிகாரி அங் சு லிங்ங்கின் கட்டளையின் அடிப்படையில் அவ்வாறு செய்ததாகக் கூறினார்.