Home உலகம் கலவர பூமியாக இலங்கை மாறி வருகிறது!

கலவர பூமியாக இலங்கை மாறி வருகிறது!

853
0
SHARE
Ad

கொழும்பு: இலங்கையில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் சவுக்கடி பகுதியிலிருந்து, கடந்த மே 12-ஆம் தேதி படகு வழியாக வெளியேற முயன்றவர்கள் குறித்து, மீனவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

உடனே அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதில் கலாவத்தை பகுதியை சேர்ந்த இரண்டு சிங்களவர்களும், வந்தாறு மூலையை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்

இவர்களுடன் சேர்ந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமான முறையில் படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றுள்ளதாகவும், காவல்துறையின் கையில் சிக்காமல் தப்பிய 15-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் மட்டக்களப்பு காவல்துறை தெரிவித்துள்ளது

#TamilSchoolmychoice

இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், மேலும்பலர் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.