Home கலை உலகம் தளபதி 63: ஜூன் 21 பட தலைப்பு, முதல் தோற்றம் வெளியீடு!

தளபதி 63: ஜூன் 21 பட தலைப்பு, முதல் தோற்றம் வெளியீடு!

962
0
SHARE
Ad

சென்னை: மெர்சல், தெறி படத்தைத் தொடர்ந்து அட்லி தற்போது நடிகர் விஜய்யை வைத்துதளபதி 63′ படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

பெண்கள் காற்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. விஜய் இதில் காற்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சென்னை அதன் சுற்றுவட்டார பகுதியில் இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இவ்வாண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் படத்துக்கான பெயரை படக்குழுவினர் தேர்வு செய்துவிட்டதாகவும், விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் 21-ஆம் தேதி படத்தின் தலைப்பு, முதல் தோற்றம் ஆகியவை வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. .ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

மெர்சல் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து, தற்போது, இப்படத்தில் இடம்பெற உள்ள பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.