கோலாலம்பூர்: மலேசிய இஸ்லாமிய பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளையின் (யாபெம்) தலைவரான அபிபுல்லா சாம்சுடினை, அவ்வறக்கட்டளையின் தலைவர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை அவர் மீதான தவறான நடத்தை பற்றிய குற்றச்சாட்டுகளை முழுமையாக ஆராய்வதற்கு உதவியாக இருக்கும் என யாபெம் ஆலோசனைக் குழுத் தலைவர் முகமட் டாவுட் பாகார் கூறினார்.
கடந்த மே 18-ஆம் தேதி, பிகேஆர் கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் பாமி பாட்சில், கடந்த பொதுத் தேர்தலில் யாபெம் ஊழியர்களைப் மிரட்டும் வகையில் ஒரு காணொளி வெளியிடப்பட்டது குறித்து காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.
அந்தக் காணொளியில், அபிபுல்லா கூறியதாவது, யாபெம் ஊழியர்களின் ஒவ்வொரு வாக்குகளும் சரிபார்க்கப்படும் எனவும், அப்படி ஒரு வேளை நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்திருந்தார்கள் எனின் அவர்கள் யாபெமில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஜசெகவிடம் சென்று வேலை தேடுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தது அந்த காணொளியில் பதிவாகியிருந்தது.