வாஷிங்டன்: கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜார்ஜியா, அட்லாண்டாவில் அமைந்துள்ள மோர்ஹைஸ் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு பிரமுகராக அழைக்கப்பட்ட, ராபர்ட் ஸ்மித் எனும் அமெரிக்க தொழிலதிபர், பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களின் கல்விக் கடனையும் தாம் செலுத்துவதாக அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சுமார் 400 பேரின் கல்வி க்கடன் என்பது, சுமார் 40 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மித் முன்னதாகவே, இந்த கல்லூரிக்கு 1.5 மில்லியன் டாலர்கள், நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபக்காலமாக, அமெரிக்க கல்லூரிகளுக்கான கல்வித்தொகை என்பது உயர்ந்து கொண்டே வருவதாகவும், மாணவர்களும் கல்விக்கடன் பெறும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. அங்குள்ள மாணவர்களின் மொத்த கல்விக்கடன் சுமார் 1.5 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளதாக பிட்ச் ரேட்டிங் ஏஜென்சி தெரிவித்துள்ளது.