Home Video ஜிப்ஸி: ஜீவாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்!

ஜிப்ஸி: ஜீவாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்!

882
0
SHARE
Ad

சென்னை: குக்கூ மற்றும் ஜோக்கர் ஆகிய இரண்டு படங்களை மட்டும் இயக்கியுள்ள இயக்குனர் ராஜு முருகனின் அடுத்தப்படைப்பாக வெளிவர இருக்கும் படம் ஜிப்ஸி. இப்படத்தில் நடிகர் ஜீவா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் ராஜுவின் முந்தைப் படங்களின் தாக்கம் இன்னும் சமூகத்தின் நெஞ்சை விட்டு அகலாத நிலையில், மேலும் ஒரு தீவிர கருத்துடன் அவர் களம் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காணொளி வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப் பிரம்மாண்டமாக அண்மையில் நடந்து முடிந்தது. விழாவில் படக்குழுவினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

நடிகர் ஜீவாவிற்கு இப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும் என பலர் கருதுகின்றனர். கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: