Home இந்தியா கருத்துக் கணிப்புகளை தொடர்ந்து ஓரணியில் எதிர்க்கட்சிகள்!

கருத்துக் கணிப்புகளை தொடர்ந்து ஓரணியில் எதிர்க்கட்சிகள்!

974
0
SHARE
Ad

புது டில்லி: வருகிற வியாழக்கிழமை இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளிவர இருக்கும் வேளையில், 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள், இந்திய தேர்தல் ஆணையத்தை சந்தித்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இவிஎம்) மற்றும் விவிபிஏடி வாக்குச் சீட்டு இயந்திரம் ஆகியவை குறித்து தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தெரிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

2019-ஆம் தேர்தலில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எளிமையான வெற்றி கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஊகித்துள்ளதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்தக் கருத்துக் கணிப்பை பல எதிர்க்கட்சித் தலைவர்கள் நிராகரித்து வருகின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரும், இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

எல்லா நேரங்களிலும் தேர்தலில் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டால் தேர்தல் இயந்திரங்களை குறைக்கூறுவதையே எதிர்க்கட்சியினர் காரனமாகக் கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அவர்களின் கோரிக்கையை மறுத்துள்ளது.