தற்போது, லோகேஷ் கனகராஜ், டிரீம் வாரியஸ் நிறுவனத்திற்காக தனது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். ‘கைதி’ என்ற பெயரில் தயாராகி வரும் படத்தில் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனிடையே, கார்த்தி, ’சித்திரம் பேசுதடி’ நரேன் நடித்து வரும் இப்படத்தின் இரண்டாவது தோற்றத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் யோகி பாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர், ’தலைவாசல்’ விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கிடையில், படக்குழுவினர் ‘கைதி’ திரைப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். மேலும், இப்படத்தின் முன்னோட்டக் காணொளி வருகிற 30-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.