Home இந்தியா தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மீண்டும் மோடி பிரதமர் – எடப்பாடி முன்மொழிந்தார்

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மீண்டும் மோடி பிரதமர் – எடப்பாடி முன்மொழிந்தார்

879
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியப் பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று சனிக்கிழமை புதுடில்லியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் மற்ற தமிழக பாஜக கூட்டணித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அடுத்த பிரதமராக நரேந்திர மோடியை முன்மொழியும் கௌரவம் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு வழங்கப்பட, அவரும் மோடியை முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து பிரதமராக ஒருமனதாக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் மோடி இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார்.

எதிர்வரும் மே 30-ஆம் தேதி மோடி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மோடியின் நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று தனது பூர்வீக மாநிலமான குஜராத் செல்லும் மோடி அங்கு தனது தாயாரைச் சந்தித்து ஆசி பெறுகிறார்.

நாளை திங்கட்கிழமை தான் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வருகை தரும் மோடி, அங்கு நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.