Home உலகம் இலங்கை: 99 விழுக்காடு பாதுகாப்பு இயல்பு நிலைக்கு திரும்பியது!- சிறிசேனா

இலங்கை: 99 விழுக்காடு பாதுகாப்பு இயல்பு நிலைக்கு திரும்பியது!- சிறிசேனா

843
0
SHARE
Ad

கொழும்பு: இலங்கையில் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாது என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும், வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற போது இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 99 விழுக்காடு பாதுகாப்பு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை தான் உறுதிப்படுத்துவதாகவும் சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பாதுகாப்பு பிரிவினருக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடனேயே அவசரகால சட்டத்தை தாம் அமுல்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பாதுகாப்பு துறையினருக்கு வெளிநாட்டு புலனாய்வுத் துறையிடமிருந்து கிடைத்த உதவிகள் தொடர்பிலும் சிறிசேனா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் இந்த அனைத்து நாடுகளும் வழங்கிய ஒத்துழைப்புக்களையும், பொருளாதார அபிவிருத்திக்கான உதவிகளையும் தாம் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக சிறிசேனா வெளிநாட்டு தூதர்களிடம் தெரிவித்துள்ளார்.