கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பத்தொன்பதாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார விதிமீறல் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து, ஏஷான் பெர்டானா செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு 143 மில்லியன் ரிங்கிட் பணம் செலுத்தப்பட்டதாக, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவன தலைவர் நிக் பைசால் அரிப் காமில் ஒப்புக் கொண்டதாக, ஏஷான் பெர்டானா செண்டெரியான் பெர்ஹாட் தலைமை மேலாளர் ஷாம்சுல் அன்வார் சுலைமான் கூறினார். இந்த விவகாரம் குறித்து நிக் தமக்கு தொலைபேசியின் மூலம் தெரிவித்ததாக ஷாம்சுல் கூறினார்.
இந்த வழக்கிலிருந்து ஷாம்சுல் காவல் துறையிலிருந்து விடுவிக்கப்பட்டப் பிறகு இது நடந்ததாகக் கூறினார்.