இந்நிலையில், பார்த்திபனின் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஒத்த செருப்பு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இப்படத்தை பார்த்திபனே இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியாகி உள்ளது. ஒரே அறையில் படம் முழுவதும், மாறி மாறி பேசி நடிப்பது போன்ற காட்சி இதில் இடம் பெற்றுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணோளியைக் காணலாம்: