Home உலகம் தோக்கியோ: சிறுமி உட்பட 2 பேர் பலி, இதற்கு காரணமான ஆடவன் மரணம்!

தோக்கியோ: சிறுமி உட்பட 2 பேர் பலி, இதற்கு காரணமான ஆடவன் மரணம்!

753
0
SHARE
Ad

தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவுக்கு வெளியே நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் ஒரு சிறுமி (பள்ளி மாணவி) உட்பட இரண்டு பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய ஆடவன் தன்னைத் தானே தாக்கிக் கொண்டதில், தற்போது அவனும் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காவாசாகி என்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மேற்குறிப்பிட்ட இருவரைத் தவிர 17 பேருக்கு காயம் ஏறப்பட்டுள்ளதாகவும் ஏஎப்பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது

வளர்ந்த நாடுகள் பட்டியலில் ஜப்பானில் எப்போதும் வன்முறைச் சம்பவங்கள் மிகக் குறைவாகத்தான் நடக்கும். எனவே, இச்சம்பவம் உலகை மட்டுமல்லாமல் ஜப்பானையும் உலுக்கியுள்ளது

#TamilSchoolmychoice

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது பயணத்தை நிறைவு செய்யும் போது இச்சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தித்துக் கொள்கிறேன். இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்இந்த திடீர் கத்திக் குத்து சம்பவத்துக்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. ஜப்பான் அரசு தரப்பு அது குறித்து விசாரணை செய்து வருகிறது.