Home நாடு அடிப்: மீண்டும் பேரணி நடத்தப்படும், உண்மை வெளிவர வேண்டும்!

அடிப்: மீண்டும் பேரணி நடத்தப்படும், உண்மை வெளிவர வேண்டும்!

720
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கெராக்கான் பெம்பெலா உம்மா (உம்மா) இயக்கம் கடந்த ஆண்டு சீ பில்ட் கோயில் கலவரத்தின் போது மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பிற்காக மீண்டும் ஒருமுறை பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை வீடமைப்பு மற்றும் நகராட்சி மன்ற அமைச்சின் வழக்கறிஞர் ஷாஸ்லின் மன்சோர் அடிப்பின் மரண விசாரணை வழக்கிலிருந்து விலகிக் கொண்டுள்ள வேளையில், தங்களுக்கு இந்த விலகலில் மர்மம் இருப்பதாக தோன்றுகிறது என அவ்வமைப்பு கூறியுள்ளது.

ஷாஸ்லினின் இந்த விலகலுக்கான காரணத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும், யாருடைய கட்டளையின்படி ஷாஸ்லின்  இந்த வழக்கிலிருந்து விலகினார் எனும் உண்மையும் தங்களுக்கு தெரிய வேண்டும் என்றும் உம்மா அமைப்பின் தலைவர் அமினுட்டின் யாஹாயா கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று திங்கட்கிழமை தாம் அடிப்பின் மரண விசாரணை வழக்கிலிருந்து விலகுவதாக ஷாஸ்லின் தெரிவித்திருந்தார். இருப்பினும், இந்த விலகலுக்கான முழு விவரங்களை அவர் விவரிக்க மறுத்துவிட்டார்.