Home One Line P2 சென்னை அனைத்துலக திரைப்பட விழாவில் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ சிறந்த திரைப்படமாக தேர்வு!

சென்னை அனைத்துலக திரைப்பட விழாவில் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ சிறந்த திரைப்படமாக தேர்வு!

815
0
SHARE
Ad

சென்னை: நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின்ஒத்த செருப்புதிரைப்படம், சென்னை அனைத்துலக திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற 17-வது அனைத்துலக திரைப்பட விழாவில் 55 நாடுகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. இம்மாதம் 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரையிலும் இத்திரைப்பட விழா நடைபெற்றது.  

இந்த விழாவில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அதையடுத்து, சில்லுக்கருப்பட்டி, பக்ரீத், அசுரன், ராட்சசன், ஜீவி ஆகிய படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.