Home One Line P1 “படாவியும் நஜிப்பும் ஒருபோதும் இந்தியர்களையும், சீனர்களையும் இழிவாகப் பேசியதில்லை!”- ச.சிவராஜ்

“படாவியும் நஜிப்பும் ஒருபோதும் இந்தியர்களையும், சீனர்களையும் இழிவாகப் பேசியதில்லை!”- ச.சிவராஜ்

998
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மலேசிய இந்தியர்கள் மற்றும் சீனர்களை குறி வைத்து கருத்து தெரிவித்த பிரதமர் மகாதீர் முகமட்டுக்கு மஇகா உதவித் தலைவர் ச.சிவராஜ் தமது ஏமாற்றத்தைத் தெரிவித்து உள்ளார்.

மேலும், பிரதமரின் அக்கூற்று ஒட்டு மொத்த சீனர் மற்றும் இந்தியர்களை கோபப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் குடியுரிமை பிரச்சனை குறித்து தனது கருத்துகளை தெரிவித்ததில், சீன மற்றும் இந்திய சமூகங்கள் எவ்வாறு நாட்டிற்குள் வரவேற்கப்பட்டார்கள் என்பதோடு, அவர்களுக்கு தகுதிகள் இல்லாதபோதும் குடியுரிமையும், அரசாங்கத்தில் இடமும் வழங்கப்பட்டுள்ளன என்று மகாதீர் ஓர் எடுத்துக்காட்டாக அளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

துன் மகாதீரின் இம்மாதிரியான இன ரீதியிலான கருத்து எமக்கு வியப்பை அளிக்கிறது. நாட்டில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், அதுவும் சீனர்கள் மற்றும் இந்தியர்களின் அதிகமான ஆதரவைப் பெற்ற ஒருவர் இவ்வாறு பேசுவது ஏற்கக்கூடியது அல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில், சீன மற்றும் இந்திய தலைவர்கள் இத்தகைய இனவெறி அறிக்கைக்கு வெட்கப்பட வேண்டும். உங்களுக்கு சுயமரியாதை இல்லை என்றால், நீங்கள் இதைப் பற்றி வெட்கப்பட வேண்டியதில்லை.” என்று அவர் கூறினார்.

மேலும் கூறுகையில், தாம் இரண்டு நல்ல பிரதமர்களை சந்தித்துள்ளதாகக் கூறி, முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவி மற்றும் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கை மேற்கொள் காட்டினார். அவர்கள் பதவியில் இருந்த போது, ஒருபோதும் இந்தியர்கள் மற்றும் சீனர்களின் மனம் நோகும்படியாக தடம் புரண்ட அறிக்கைகளை வெளியிட்டதில்லை என்று அவர் கூறினார்.

துன் அப்துல்லா மற்றும் நஜிப் ரசாக் போன்ற இரண்டு முன்னாள் பிரதமர்கள் இந்நாட்டை ஆண்டதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் மிகவும் எச்சரிக்கையாகவும், இந்திய மற்றும் சீன சமூகங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர்கள்.”

பல ஆண்டுகளாக அவர்கள் நாட்டை வழி நடத்தி உள்ளனர். அவர்கள் ஒருபோதும் இப்படி எங்களை அவமதித்ததில்லை.” என்று அவர் சுட்டிக் காட்டினார்.