Home இந்தியா பதவியேற்கும் முன் காந்தி, வாஜ்பாயி சமாதிகளிலும் போர் வீரர் நினைவுச் சின்னத்திலும் மோடி அஞ்சலி

பதவியேற்கும் முன் காந்தி, வாஜ்பாயி சமாதிகளிலும் போர் வீரர் நினைவுச் சின்னத்திலும் மோடி அஞ்சலி

700
0
SHARE
Ad
மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தும் மோடி

புதுடில்லி – இன்று வியாழக்கிழமை மாலை இந்திய நேரப்படி 7.00 மணிக்கு இரண்டாவது தவணைக்குப் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடி, இன்று காலை 7.00 மணிக்கே தனது நிகழ்ச்சிகளைத் தொடக்கினார்.

காலை 7.00 மணியளவில் முதல் பணியாக மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய மோடி, இந்த 2019-ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தியின் 150-வது ஆண்டு என்பதையும் தனது டுவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்தார்.  காந்தியின் உன்னதக் கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவோம் என்றும், ஏழைகளையும், பிற்படுத்தப்படோரையும் உயர்த்துவதற்கு காந்தி தொடர்ந்து நமக்கு ஊக்க சக்தியாகத் திகழ்வார் என்றும் மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டார்.

வாஜ்பாயி சமாதியில் அஞ்சலி செலுத்தும் மோடி

அதன் பின்னர், முன்னாள் பிரதமரும், முன்னாள் பாஜக தலைவருமான வாஜ்பாயியின் சமாதிக்கு சென்று மோடி அஞ்சலி செலுத்தினார். பாஜகவின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் முதன் முதலாக பாஜக ஆட்சி அமைத்து பிரதமரானவர் ஆவார். அந்த அடிச்சுவட்டில் தற்போது இரண்டாவது தவணைக்கும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்பதற்காக நன்றி தெரிவிக்கும் வண்ணம் மோடி வாஜ்பாயி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

#TamilSchoolmychoice

வாஜ்பாயி தனது அரசியல் குரு என மோடி எப்போதும் பெருமிதத்துடன் குறிப்பிடுவார்.

நாட்டுக்காக உயிர்நீத்த போர்வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மோடி

மூன்றாவது நிகழ்ச்சியாக புதுடில்லியில் நாட்டுக்காக உயிர்நீத்த போர்வீரர்கள் நினைவுச் சின்னத்திலும் அஞ்சலி செலுத்தினார் மோடி.

இன்று மாலை நடைபெறவிருக்கும் பதவியேற்பு விழாவில் சுமார் 6,500 பேர் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

பல பிரமுகர்களும், அயல் நாட்டுத் தலைவர்களும் கலந்து கொள்ளவிருக்கும் இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களோ, ஸ்டாலினோ மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.