இலண்டன் – நேற்று வியாழக்கிழமை (மே 30) தொடங்கிய இங்கிலாந்து-வேல்ஸ் நாடுகளில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் முதல் ஆட்டம் இங்கிலாந்துக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் இலண்டன் ஓவல் அரங்கில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் 104 ஓட்டங்கள் (ரன்) வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
முதல் பாதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சைத் தேர்ந்தெடுக்க இங்கிலாந்து 50 ஓவர்களில் 311 ஓட்டங்கள் எடுத்து, 8 விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் 312 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 39.5 ஓவர்களிலேயே பத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆட்டத்தின் முடிவில் 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இன்று உலகக் கிண்ணப் போட்டிகளின் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவுகளின் அணியும் மோதுகின்றன.
இந்தப் போட்டிகளில் 10 நாடுகள் பங்கு பெறுகின்றன.