ஜோ லோ கைது குறித்த மேல்விவரங்களை தெரிவிக்காமல், நீதித் துறை விசாரணையை எதிர்நோக்க ஜோ லோ என அழைக்கப்படும் அவர் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதில் தான் நம்பிக்கைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
“கடவுள் அருளால் அவரை வெகுசீக்கிரம் கைது செய்து கொண்டு வருவோம். வெகு சீக்கிரம் என்றால் உண்மையிலேயே வெகு சீக்கிரம்” என அப்துல் ஹமிட் பாடோர் உறுதிபடக் கூறினார்.
நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜோ லோவின் இருப்பிடம் தங்களுக்கு தெரிந்து விட்டதாகவும் ஹமிட் பாடோர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
Comments