Home நாடு மஇகா மத்திய செயற்குழுவில் இந்திய முஸ்லிம் பிரதிநிதி இடம் பெறுவார்!

மஇகா மத்திய செயற்குழுவில் இந்திய முஸ்லிம் பிரதிநிதி இடம் பெறுவார்!

900
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மஇகா மத்திய செயற்குழுவில் இந்திய முஸ்லிம் பிரதிநிதி இடம் பெறுவார் என மஇகா கட்சித் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.

கடந்த காலங்களில் கட்சிக்கும் இந்திய சமூதாயத்திற்கும், இந்திய முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது எனக் கூறிய அவர் மஇகாவிற்கு பக்க பலமாகவும் அவர்கள் இருந்து வந்துள்ளதைக் குறிப்பிட்டார்.

அவர்களுக்கான அங்கீகாரத்தை நாம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவ்வகையில், கூடிய விரைவில் அவர்களை பிரதிநிதிக்கும் பிரதிநிதி மஇகா மத்திய செயற்குழுவில் நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டார். மஇகா வலுப்பெறும் வகையில் பல்வேறு இந்தியக் கட்சிகளுடன் மஇகா பேச்சு வார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

அண்மையில் மஇகா தலைமைகத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற போது அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.