Home இந்தியா மோடி அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள்

மோடி அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள்

1231
0
SHARE
Ad

புதுடில்லி – இன்று பதவியேற்ற நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் (படம்) மீண்டும் முழு அமைச்சராகத் தொடர்கிறார்.

மற்றொருவர் முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த சுப்ரமணியம் ஜெய்சங்கர். வெளியுறவுத் துறையில் பரந்த அனுபவம் பெற்ற ஜெய்சங்கர் அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளில் தூதராகப் பணியாற்றியவர் ஆவார்.

அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட ஜெய்சங்கர் (படம்) வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இருவருமே தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களாக இருப்பவர்கள். எந்தத் தொகுதியிலும் போட்டியிட்டு வென்று வந்தவர்கள் அல்ல!