Home நாடு மன உளைச்சல் காரணமாக சாலை வன்முறைகள் அதிகரிக்கின்றன!

மன உளைச்சல் காரணமாக சாலை வன்முறைகள் அதிகரிக்கின்றன!

765
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மன உளைச்சல் காரணிகளும் சாலை வன்முறைகள் போன்ற சாலை குற்றங்களுக்கு வழி வகுக்குகின்றன என மாஹ்சா பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் முகமட் ஹுசைன் ஹாபில் கூறுகிறார்.

இம்மாதிரியான மன உளைச்சல்கள், அவர்களின் வாழ்க்கை மற்றும் வீட்டுப் பிரச்சனைகள் போன்ற சூழ்நிலைகளினால் மேலும் மோசமடடைகின்றன என மலாயா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் மாரியானி முகமச் நோர் கூறினார். இந்த உளைச்சலுக்கு ஆளானவர்கள் சாலையில் வன்முறையிலும் ஈடுபட முயலுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய தருணத்தில், அவர்கள் எடுக்கும் முடிவுகள் அவர்களை மீறி நடக்கிறது எனவும் அவர் கூறினார். அண்மையில் வீவா கார் கண்ணாடியை தனது தலைக்கவசத்தை வீசி சேதப்படுத்திய டேனியல் என்பவரைப் பற்றி வினவிய போது, அவரின் இச்செயலும் அவ்வாறே கவனிக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

#TamilSchoolmychoice

427-வது சட்டப் பிரிவின் கீழ் டேனியலுக்கு 12 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும், இந்த தீர்ப்பானது ஒரு சில சட்ட வல்லுனர்களின் எதிர்ப்பை எதிர்க்கொண்டுள்ளது.

டேனியலுக்கு, அபராதம், சேதத்தை சரிப்படுத்த, மன்னிப்புக் கோர நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம் என்றும், மேலும் அவருக்கு மனநல ஆலோசனை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்திருக்கலாம் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.