Home உலகம் கிரிக்கெட் : இலங்கை – பாகிஸ்தான் ஆட்டம் இரத்து

கிரிக்கெட் : இலங்கை – பாகிஸ்தான் ஆட்டம் இரத்து

1152
0
SHARE
Ad

பிரிஸ்டோல் (இங்கிலாந்து) – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த இலங்கை – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் – அந்த அணிகள் விளையாடவிருந்த கிரிக்கெட் திடல் ஈரமாக இருந்த காரணத்தால் – இரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த இரண்டு குழுக்களுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

#TamilSchoolmychoice

வேல்ஸ் கார்டிப் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்தும், வங்காளதேசமும் மோதுகின்றன.

டாண்டன் நகரில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும், நியூசிலாந்தும் விளையாடுகின்றன.

நாளை ஜூன் 9-ஆம் தேதி இலண்டன் ஓவல் அரங்கில் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் களம் காண்கின்றன.