Home இந்தியா குருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரைப் பூ காணிக்கை செலுத்திய மோடி

குருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரைப் பூ காணிக்கை செலுத்திய மோடி

953
0
SHARE
Ad

குருவாயூர் – பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் ஆலயத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பின்பற்றப்படும் பாரம்பரியத்திற்கு ஏற்ப தனது எடைக்கு எடை நிகராக தாமரைப் பூக்களை காணிக்கை செலுத்தினார்.

தாமரைப் பூ பாஜகவின் அதிகாரபூர்வ சின்னம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குருவாயூர் கோவிலில் வழிபட வருபவர்கள் பொதுவாக தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப பல்வேறு பொருட்களை துலாபாரத்தில் அமர்ந்து காணிக்கை செலுத்துவது வழக்கம். தினமும், சர்க்கரை, பழங்கள், அரிசி, மலர்கள், என வித்தியாசமான பல பொருட்களைப் பக்தர்கள் காணிக்கை செலுத்துவர்.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதன் முறையாக மாலத் தீவுகளுக்கு செல்லும் வழியில் கேரளா வந்த மோடி, குருவாயூர் கோவில் சென்று வழிபட்டதோடு, தனது காணிக்கையையும் செலுத்தினார்.

குருவாயூர் ஆலய வருகைக்குப் பின்னர் கேரளா பாஜக தொண்டர்களிடையே உரையாற்றிய மோடி, அவர்களின் உழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் கேரளா மாநில வருகையை முடித்துக் கொண்டு மாலத் தீவு சென்றடைந்தார்.

அங்கு, மாலத் தீவு நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றினார். தனது உரையின் முக்கிய அம்சமாக அண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் நட்பு பாராட்டும் என உறுதியளித்தார்.

இன்று சனிக்கிழமை மாலத்தீவு வந்தடைந்த மோடிக்கு வரவேற்பு நல்கப்படுகிறது.
மாலத் தீவுகளின் அதிபர் இப்ராகிம் முகமட் சோலிஹ்க்கு இந்திய கிரிக்கெட் அணியினர் கையெழுத்திட்டு வழங்கிய கிரிக்கெட் மட்டையை வழங்குகிறார் மோடி