Home இந்தியா நன்னடத்தை காரணமாக சசிகலா டிசம்பரில் வெளியாகலாம்!

நன்னடத்தை காரணமாக சசிகலா டிசம்பரில் வெளியாகலாம்!

889
0
SHARE
Ad

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை, நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க பெங்களூரு பரப்பர அக்ரஹார சிறைத்துறை நிருவாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாசசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு வருடம் சிறை தண்டனை விதித்தது. இந்த வழக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும் மற்றவர்களுக்கு தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது

இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நான்கு பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நான்கு பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமனறத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்

#TamilSchoolmychoice

இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பினை 2017 ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதின்றம் வழங்கியது. இதன்படி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலா சிறைக்கு சென்று தற்போது இரண்டரை வருடங்களை நெருங்கிவிட்டது. கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள், சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுவிப்பது குறித்து அம்மாநில அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

இந்த கடிதத்தை அரசு ஏற்றுக்கொண்டால் அவர் வரும் டிசம்பர் மாதமே வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவின் சிறை தண்டனை வரும் 2021-ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது.