பிஷ்கெக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்ஓசி), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, இருநாட்டு தலைவர்களும் பேசிக்கொள்ளவில்லை என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் கைகுலுக்குவதை தவிர்த்தார் எனவும் கூறப்படுகிறது. தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் ஒருதலைப்பட்சமான போக்கினை கையாண்டு வருவதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இம்மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து தீவிரவாத அமைப்புகள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சீன நாட்டுடன் பேச்சு வார்த்தையை தொடர முடியும் என்று வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பிரதமர் மோடி இம்ரான் கானை சந்திக்காமல் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.